உடுமலை அருகே கோவில்களை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

உடுமலை அருகே கோவில்களை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
X

கருவண்ணராயர்-வீரசுந்தரி கோவில், கருப்பராயன் கோவில், வீரமாச்சி கோவில் என மூன்று கோவில்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த மக்கள். 

உடுமலை அருகே, மூன்று கோவில்களை அகற்றும் அதிகாரிகளின் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை தென்பூதிநத்தம், செங்குளம் நீர் வழித்தடம், குளக்கரையிலுள்ள, 22 வீடுகளை அகற்ற அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

அப்பகுதியிலுள்ள, கருவண்ணராயர்-வீரசுந்தரி கோவில், கருப்பராயன் கோவில், வீரமாச்சி கோவில் என மூன்று கோவில்களை அகற்ற அதிகாரிகள் முற்பட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகளை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திரும்பினர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி