உடுமலை வழியாக கோவை - ராமேஸ்வரம் ரயில் இயக்க ரயில் பயணிகள் கோரிக்கை

உடுமலை வழியாக கோவை - ராமேஸ்வரம் ரயில் இயக்க ரயில் பயணிகள் கோரிக்கை
X

Tirupur News- உடுமலை வழியாக கோவை - ராமேஸ்வரம் ரயில் இயக்குமாறு, ரயில் பயணிகள் கோரிக்கை (கோப்பு படம்)

Tirupur News-உடுமலைப்பேட்டை வழியாக கோவை - ராமேஸ்வரம் ரயில் இயக்க வேண்டும் என்று, ரயில் பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட பிறகு கூடுதல் ரயில் சேவை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து பகுதி மக்களும் இருந்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக நீண்ட காலமாக பயணிகள் வலியுறுத்தும் ரயில்கள் கூட இயக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவையை மீண்டும் செயல்படுத்த உடுமலை சுற்றுப்பகுதி பயணிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து ரயில் பயணிகள் சார்பில் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

கோவை - பொள்ளாச்சி - திண்டுக்கல் மீட்டர் கேஜ் வழித்தடத்தில் ஆங்கிலேயர் காலத்திலேயே கோவை - ராமேஸ்வரம் ரயில் இயக்கப்பட்டு அதிகப்படியான மக்கள் அச்சேவையை பயன்படுத்தி வந்தனர். இந்த ரயிலை தினசரி விரைவு ரயிலாக கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை வழியாக உடனடியாக இயக்க வேண்டும்.

சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெற்கு ரயில்வேக்கு, ராமேஸ்வரம் தினசரி விரைவு ரயிலை இயக்குவது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஆன்மிக பக்தர்கள் மற்றும் வணிகர்களுக்கு இந்த ரயில் மிக பயனுள்ளதாக இருக்கும். திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் பகுதியிலிருந்தும், கோவை - ராமேஸ்வரம் ரயிலை இயக்க அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது குறித்து மக்கள் பிரதிநிதிகள் சார்பிலும், தெற்கு ரயில்வேக்கு பல முறை மனு அனுப்பியுள்ளனர். எனவே விரைவில், ராமேஸ்வரம் ரயிலை இயக்கி பல ஆயிரக்கணக்கான பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் ரயில் பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!