உடுமலையில் தன்னார்வ அமைப்பினர் சார்பில் பனை விதை நடவு

உடுமலையில் தன்னார்வ அமைப்பினர் சார்பில் பனை விதை நடவு
X

உடுமலை ஐவர் தோட்டத்தில், தன்னார்வ அமைப்பினர் மூலம், பனை விதை நடவு செய்யப்பட்டது

உடுமலையில் தன்னார்வ அமைப்பினர் சார்பில் பனை விதை நடவு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள ஐவர் மலை அருகே, தனியார் தோட்டத்தில் பனை விதை நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், கிழக்கு அரிமா சங்கத்தினர் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் பங்கேற்று, பனை விதை நடவு செய்தனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வையும், நீர் செறிவூட்டும் திட்டம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். நடப்படும் மரக்கன்றுகளை நல்ல முறையில் வளரத்தெடுப்பது தான், மரக்கன்று நடுவதன் நோக்கமாக இருக்க வேண்டும் எனவும், இதில் அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story