உடுமலையில் ரூ.50 லட்சம் செலவில் டிஜிட்டல் நுாலகம் திறப்பு

உடுமலையில் ரூ.50 லட்சம் செலவில் டிஜிட்டல் நுாலகம் திறப்பு
X

உடுமலை கிளை நூலகத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஜிட்டல் நூலகத்தை திறந்து வைத்தார்.

உடுமலையில், ரூ. 50 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் நுாலகம் திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தளி சாலையில் உள்ள முதல் கிளை நுாலகத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில், டிஜிட்டல் நுாலகம், இன்று திறக்கப்பட்டது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இதனை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உட்பட பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் என, பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!