ஒமிக்ரான் வைரஸ் பரவல்: தமிழக – கேரள எல்லையில் பரிசோதனை

ஒமிக்ரான் வைரஸ் பரவல்: தமிழக – கேரள எல்லையில் பரிசோதனை
X

ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலால், உடுமலையில், தமிழக – கேரள எல்லையில், பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஒமைக்ரா வைரஸ் தொற்று பரவலால், தமிழக – கேரள எல்லையில், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது

நாடு முழுக்க ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், கேரள–- தமிழக எல்லையில் அமைந்துள்ள, சின்னாறு மற்றும் ஒன்பதாறு சோதனை சாவடிகளில், வனத்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து, வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வாகனங்களில் வருவோருக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 'தெர்மல் ஸ்கேனர்' கருவியின் உதவியுடன் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. உடல் வெப்பம் அதிகமாக இருந்தால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இப்பணியில் வனத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் சுழற்சி முறையில் ஈடுபடுகின்றனர்.

Tags

Next Story
scope of ai in future