போடிபட்டி ஊராட்சிப்பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

போடிபட்டி ஊராட்சிப்பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு
X

போடிபட்டி பள்ளியில் நடந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி. 

உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சி பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உடுமலை, போடிபட்டி ஊராட்சியில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த சிறுதானிய உணவுகள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், முதியோர் நலன் சார்ந்த மருத்துவ குறிப்புகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, உதவி திட்ட அலுவலர் நாகராஜ், தலைமை வகித்தார். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டிருந்த, ஊட்டச்சத்துமிக்க பல்வேறு வகை சிறுதானிய உணவுகள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு உணவிலும் என்னென்ன வகை ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன என்பது குறித்த விவரமும் இடம் பெற்றிருந்தது. ஊராட்சி தலைவர் சவுந்தர்ராஜன், செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!