காவலர் குடியிருப்பில் கொசு மருந்து அடிக்கும் பணி
X
உடுமலை, காவலர் குடியிருப்பு பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
By - Mukil_Reporter |21 Nov 2021 11:45 AM IST
நோய் பரவலை தடுக்க, உடுமலை காவலர் குடியிருப்பு பகுதியில், கொசு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது
நோய் பரவலை தடுக்க, காவலர் குடியிருப்பு பகுதியில், கொசு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில், கொசு மருந்து அடிக்கப்பட்டு வரும் நிலையில், உடுமலை காவலர் குடியிருப்பு பகுதியில், கொசு மருந்து தெளிக்கப்பட்டது. அரசு மாணவர் விடுதியிலும், கொசு மருந்து தெளிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் இப்பணி நடந்தது.
பொதுமக்கள் சுகாதாரம் காக்க வேண்டும்; கொசு உற்பத்தியாகும் வகையில், தண்ணீரை தேக்கி வைக்கக்கூடாது என நகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu