ஒழுங்குப்படுத்துதல் சட்டம்: உடுமலை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு

ஒழுங்குப்படுத்துதல் சட்டம்: உடுமலை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு
X

உடுமலை சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் உடுமலை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம், உடுமலையில் நடைபெற்றது.

உடுமலை தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில், உடுமலை சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் உடுமலை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. 2014ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை உடுமலை நகரத்தில் முறையாக அமல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு சாலையோர வியாபாரிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அனைத்து சாலையோர வியாபாரிகள் குடும்பத்துடன் மே தின பேரணியில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பாபு, துணை தலைவராக பஞ்சலிங்கம், செயலாளராக ஆஜிக் அலி, துணை செயலாளராக பாபு, பொருளாளராக சித்திக் அலி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் நிலா மைதீன், குணா அப்துல், ரஹீம் சிபி மற்றும் மீரா ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக, சித்திக் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!