2 ஆண்டுக்கு பின் கூடிய கூட்டம்: இருக்கை இல்லாததால் விவசாயிகள் வாட்டம்

2 ஆண்டுக்கு பின் கூடிய கூட்டம்: இருக்கை இல்லாததால் விவசாயிகள் வாட்டம்
X

விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், இருக்கை இல்லாததால், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்.

உடுமலையில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், இருக்கை வசதி இல்லாததால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின் நேற்று, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதிகளவு விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தனர். ஆனால், குறைந்தளவு இருக்கைகளே போடப்பட்டிருந்ததால், விவசாயிகள் அதிருப்தியடைந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், உடுமலை அரசு கல்லுாரி கட்டடத்தில், கூட்டத்தை நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ததால், விவசாயிகள் தர்ணாவை கைவிட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!