மே17 ம் தேதி முதல் உடுமலை உழவர் சந்தை, பஸ் நிலையத்துக்கு மாற்றம்

மே17 ம் தேதி முதல் உடுமலை உழவர் சந்தை,  பஸ் நிலையத்துக்கு மாற்றம்
X

தற்காலிக உழவர் சந்தைக்கு தயார்படுத்தப்பட்டு வரும் பேருந்து நிலையம்.

உடுமலைப்பேட்டை உழவர் சந்தை வருகிற மே 17ம் தேதி முதல் பஸ் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உழவர் சந்தை, மே 17ம் தேதி முதல் பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. உடுமலைப்பேட்டை உழவர்சந்தை ரயில்வே ஸ்டேஷன் அருகே செயல்படுகிறது. இடம் குறுகியதாக உள்ளதால், மக்கள் அதிகம் கூடும்போது கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு முடியும் வரை சந்தையை மாற்ற நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் சந்தை அமைக்கும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டனர். பஸ் ஸ்டாண்டு தூய்மை செய்யப்பட்டு, சமூக இடைவெளி கோடுகள் வரையப்பட்டது. மே 17முதல், இங்கு சந்தை செயல்படுவதாகவும், மாஸ்க் அணிந்து வந்து காய்கறிகள் வாங்கி செல்ல வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!