உடுமலை கிளை நூலகத்தில் நூலக வார விழா துவக்கம்

உடுமலை கிளை நூலகத்தில் நூலக  வார விழா துவக்கம்
X

உடுமலை கிளை நூலகத்தில் வாசகர் வட்ட விழா துவங்கியது. 

உடுமலை கிளை நூலகத்தில், நூலக வார விழா துவங்கியது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, கிளை நுாலகம் எண் 2ல், நூலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய நுாலக வார விழா, பாரதியார் நுாற்றாண்டு விழா துவங்கியது. வாசகர் வட்ட துணை தலைவர் சிவக்குமார், தலைமை வகித்தார். முன்னதாக, நூலகர் கணேசன், வரவேற்றார். பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி நுாலகர் சுப்பிரமணியன், வாசிப்பின் அவசியம், புத்தகம் படிக்கும் முறை குறித்து பேசினார்.

இதையடுத்து, பொதுமக்கள் பார்வைக்கு, புதிய நூல்களை உள்ளடக்கிய கண்காட்சியும் துவக்கப்பட்டது. வரும், 21ம் தேதி வரை, தினமும், நூல்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டது. விழாவில், பேராசிரியர் கண்டிமுத்து, வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார், சிலம்பம் பயிற்சியாளர் வீரமணி, ஆசிரியர் விஜயலட்சுமி, அரசு மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!