உடுமலை பகுதியில் மீண்டும் கீரை சாகுபடி: விவசாயிகள் தீவிரம்

உடுமலை பகுதியில் மீண்டும் கீரை சாகுபடி: விவசாயிகள் தீவிரம்
X

கிளுவங்காட்டூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கீரைகள்.

கீரை உற்பத்தியை அதிகரிக்க, கிளுவங்காட்டூர் விவசாயிகள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கீரை உற்பத்தியை அதிகரிக்க, கிளுவங்காட்டூர் விவசாயிகள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள கிளுவங்காட்டூரில் ஆண்டு முழுவதும், சுழற்சி முறையில், கீரை செய்யப்படுவது வழக்கம். அப்பகுதி விவசாயிகள், குறைந்த பரப்பில், சுழற்சி முறையில் கீரை வகைகளை பயிரிட்டு பராமரிக்கின்றனர். உடுமலை உழவர் சந்தையில், கிளுவங்காட்டூரில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் கீரை ரகங்களே பிரதான இடம் பிடிக்கின்றன.

குறிப்பாக, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை, மணத்தக்காளி உட்பட கீரைகளை பிரதானமாக சாகுபடி செய்கின்றனர். குறைந்த தண்ணீர், பராமரிப்பு மட்டுமே தேவையுள்ளதால், சிறு, குறு விவசாயிகளுக்கு இச்சாகுபடி நிரந்தர வருவாய் அளித்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை சீசனில், போதிய இடைவெளி விட்டு, ஒரு மாதத்துக்கும் அதிகமாக மழை நீடித்தது. இதனால், கீரை சாகுபடிக்கான நாற்றுகளை உற்பத்தி செய்வதிலும், பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. அதிக ஈரம் காரணமாக, சாகுபடியை கைவிடும் நிலை உருவானது.

தற்போது மழை இடைவெளி விட்டுள்ளதால், மீண்டும் கீரை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வரும் வாரங்களில், உடுமலை உழவர் சந்தைக்கு வழக்கம் போல் கீரை வரத்து இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story