உடுமலையில் கிசான் ரயில் திட்டம் சாத்தியமா?

உடுமலையில் கிசான் ரயில் திட்டம் சாத்தியமா?
X

பைல் படம்.

உடுமலையில் கிசான் ரயில் திட்டம் துவக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய், இளநீர் உள்ளிட்ட அனைத்து வகை காய்கறி மற்றும் தென்னை நார் சார்ந்த தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றை குறைந்த செலவில் மும்பை, டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல கிசான் ரயில் திட்டத்தை பொள்ளாச்சியில் தொடங்குவது சம்பந்தமாக ஆலோசனை உடுமலையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனையில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட வர்த்தக பிரிவு மேலாளர், ரயில்வே அதிகாரிகள், விவசாயிகள், விவசாய பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். கிசான் ரயிலை பொள்ளாச்சியில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிடம் கோரிக்கை வைக்கப்படும் என பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!