கேரளா-மூணாறு இடையே நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் இயக்கம்

கேரளா-மூணாறு இடையே நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் இயக்கம்
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளுக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் கேரளா மாநில பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கால், இந்த வழித்தடத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது உடுமலையில் இருந்து மாநில எல்லையான சின்னாறு வரை உடுமலை அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் இருந்து இரண்டு அரசு பஸ்களும், கேரள மாநில பஸ்கள் மூணாறில் இருந்து சின்னாறு வரையும் இயக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மாநில எல்லையில் இறங்கி மறு எல்லை வரை நடந்து சென்று பஸ் ஏறி செல்கின்றனர். பஸ்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி அல்லது 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!