பொங்கல் பண்டிகையையொட்டி மல்லிகை பூ கிலோ ரூ.2,800க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி மல்லிகை பூ கிலோ ரூ.2,800க்கு விற்பனை
X

மல்லிகைப்பூ.

பொங்கல் பண்டிகை காரணமாக, மல்லிகை பூ, கிலோ 2,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

பொங்கல் பண்டிகை காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. உடுமலை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ, கிலோ, 2,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

அதே போல், மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தே காணப்பட்டது. முல்லைப்பூ கிலோ 1,800 ரூபாய், செவ்வந்தி 200 ரூபாய், ரோஸ் 240, சம்மந்தி -150, பிச்சிப்பூ - 1,700 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வியாபாரிகள் கூறுகையில், 'பொங்கல் பண்டிகை காரணமாக, பூக்கள் விலை அதிகரித்துள்ளது. மார்க்கெட்டிற்கு, விற்பனைக்காக பூக்கள் வரத்தும் அதிகளவு இருந்தது. மக்களின் நுகர்வு காரணமாக, விலை உயர்ந்துள்ளது. இரு நாட்களுக்கு விலை சரிவு இருக்காது,' என்றனர்.

கடுமையான விலையேற்றம் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பண்டிகையை முன்னிட்டு பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா