உடுமலையில் ஜமாபந்தி நிறைவு; 318 மனுக்களுக்கு தீர்வு
Tirupur News,Tirupur News Today- உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், திருப்பூர் சமுக பாதுகாப்புத் திட்ட தனி சப்-கலெக்டர் அம்பாயிலிநாதன், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
Tirupur News,Tirupur News Today- வருவாய் தீர்வாயம் என்று அழைக்ககூடிய ஜமாபந்தி உடுமலை தாலுகா அலுவலகத்தில் நேற்றுடன் நிறைவு அடைந்தது. திருப்பூர் சமுக பாதுகாப்புத் திட்ட தனி சப்-கலெக்டர் அம்பாயிலிநாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
அதன்படி கடந்த 23- ம் தேதி உடுமலை உள்வட்டத்தில் உள்ளகிராமங்களுக்கும், 24-ம் தேதி குறிச்சிக்கோட்டை உள்வட்டத்தில் கிராமங்களுக்கும், 25-ம் தேதி பெரியவாளவாடி உள் வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும், 26- ம் தேதி குடிமங்கலம் உள்வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
அதன்படி ஆக்கிரமிப்பு -50, இலவச வீட்டு மனை பட்டா -218, பட்டா மாறுதல்- 153, பட்டா மாறுதல் (நத்தம்) -21 பூமிதானம், தேர்தல் தலா ஒன்று, குடிமைப்பொருள் -2, 2சி பட்டா-2 யூ.டி.ஆர் திருத்தம்-11, விதவை உதவித்தொகை -2, நலிந்தோர் நலத்திட்டம், உழவர் பாதுகாப்பு அட்டை தலா -4, நிலஅளவை -27, உட்பிரிவு -29,தடையின்மை சான்று-1, முதியோர் ஓய்வூதியம்- 70, இயற்கை மரண உதவித்தொகை-5, உட்பிரிவு ரத்து -12, நிலஅளவை-5, பிறப்பு இறப்பு பதிவு திருத்தம்- 4,பாதை வரி -2, அரணிவாய்க்கால், பூஜ்ஜியம் மதிப்பு நிர்ணயம், குத்தகை தலா ஒன்று, உபரிநிலம்-2, இதர மனுக்கள்-61 என மொத்தம் 690 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் பல்வேறு வகையான 318 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. 372 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜமாபந்தியின் போது கிராம நிர்வாக அலுவலக பதிவேடுகள், நிலஅளவை உபகரணங்கள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் போது உடுமலை தாசில்தார் கண்ணாமணி, சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன், குடிமைப்பொருள் தாசில்தார் கார்த்திகேயன், வட்டதுணை ஆய்வாளர் சையது அபுதாகிர், வட்டசார் ஆய்வாளர் வீரக்குமார் உள்ளிட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், உதவியாளர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu