துவங்கியது வெல்லம் உற்பத்தி: விலை இனிக்குமா?

துவங்கியது வெல்லம் உற்பத்தி: விலை இனிக்குமா?
X

வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது

பொங்கல் பண்டிகை நெருங்குவதால், உடுமலைபேட்டையில் உள்ள ஆலைகளில் வெல்லம் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது

உடுமலை ஏழுகுளம் மற்றும் அமராவதி பாசனத்தில், அதிகளவு கரும்பு சாகுபடி பெருமளவு மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியிலுள்ள விவசாயிகள், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில், தாங்கள் விளை நிலங்களிலேயே, 'கிரசர்' ஆலை அமைத்து, உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இங்கு உற்பத்தியாகும் வெல்லம், கேரளா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும், பொள்ளாச்சி சந்தை வழியாக விற்பனைக்கு அனுப்ப வைக்கப்படுகிறது. நடப்பாண்டு தொடர் மழையால், கரும்பு அறுவடை மற்றும் வெல்லம் உற்பத்தி பாதித்தது. தற்போது, சீதோஷ்ண நிலை மாறியுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையும் நெருங்குவதால், கிரசர் ஆலைகளில், கரும்பு அரவை செய்து, கொப்பரையில், காய்ச்சி, உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

ஒணம் பண்டிகைக்கு, 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம், 1,200 ரூபாய் வரை விற்றது. தற்போது விலை குறைந்து, ஒரு சிப்பம், 1,100 ரூபாய் முதல் 1,150 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால், உற்பத்தியும், விலையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக, விவசாயிகள் நம்புகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!