தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது வழங்கல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது வழங்கல்
X

விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்பட்டது.

உடுமலை ஒன்றியம் எலையமுத்தூர் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம் எலையமுத்தூர் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், பயிர்க்கடன் தள்ளுபடி ரசீதை, தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் இரா. ஜெயராமகிருஷ்ணன், விவசாயிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், எலையமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர், இயக்குநர்கள், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக பொறுப்பு குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!