ஒரு வழிப்பாதையாகுமா தளி ரோடு? பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை

ஒரு  வழிப்பாதையாகுமா  தளி ரோடு? பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை
X
ஒருவழி பாதையாக மாறவுள்ள தளி ரோடு
உடுமலை தளி ரோடு பகுதியை, ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, தளி ரோட்டை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, முதல்வருக்கு மனு அனுப்பபட்டது.

அதன் பேரில், உடுமலை போக்குவரத்து ஆய்வாளர் அதற்கான கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினார். இதில், இந்து சாம்ராஜ்யம் நிறுவன தலைவர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்தும் பல்வேறு விவாதங்கள், யோசனைகள் முன்வைக்கப்பட்டன. நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கான சில முடிவுகளும் எடுக்கப்பட்டன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!