மழைநீர் ஓடைகளின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரம்

மழைநீர் ஓடைகளின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரம்
X

உடுமலையில் பல இடங்களில் தரைப்பாலம் கட்டும் பணி நடக்கிறது.

உடுமலையில், மழைநீர் ஓடைகளின் குறுக்கே, பாலம் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.

மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில், பொள்ளாச்சி–திண்டுக்கல் வரையிலான, நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், பொள்ளாச்சி–-மடத்துக்குளம் வரையிலான 50.07 கி. மீ., தொலைவுக்கு திட்டபணி துவங்கியுள்ளது. மழைநீர் ஓடைகளின் குறுக்கே, 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!