குடிமங்கலத்தில் சிறப்பு மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சர் துவக்கிவைப்பு

குடிமங்கலத்தில் சிறப்பு மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சர் துவக்கிவைப்பு
X

உடுமலை குடிமங்கலத்தில் மரக்கன்று நடும் திட்டத்தை, அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். 

குடிமங்கலத்தில் சிறப்பு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

உடுமலை, குடிமங்கலம் ஒன்றியம் அணிக்கடவு ஊராட்சி, ராமச்சந்திராபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மெகா மரம் நடு விழா நடைப்பெற்றது.

குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் அணிக்கடவு கிரி தலைமையில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் வினித், குடிமங்கலம் ஒன்றிய ஒன்றிய குழு 6வது வார்டு உறுப்பினர் கவிதா மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முதல்கட்டமாக, 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 500 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!