உடுமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று

உடுமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று
X

கோப்பு படம் 

உடுமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 10 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடுமலை அரசு மருத்துவமனையில், தற்போது, 6 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், 40 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு டாக்டர், செவிலிய கண்காணிப்பாளர் மற்றும், 8 செவிலியர்கள் உட்பட, 10 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வீட்டுத்தனிமை மற்றும் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரம் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. ஒரே நாளில், 150க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags

Next Story
ai chatbots for business