கம்மங்கூழ் விற்றாலும் இனி உரிமக்கட்டணம்: வருவாய் பெருக்கும் ஊராட்சிகள்
சித்தரிப்பு படம்
கிராமங்களை உள்ளடக்கிய கிராம ஊராட்சி நிர்வாகங்கள், நிதி நெருக்கடியால் திணறி வருகின்றன. மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், கால்வாய் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கூட நிதியில்லாத சூழலில், மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதியின் கீழ் மட்டுமே, தற்போது பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
எனவே, கிராம ஊராட்சிகளின் நிதி ஆதாரத்தை பெருக்க, பல மாவட்ட கலெக்டர்கள், ஊராட்சி நிர்வாகங்களுக்கு சில அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். அதன்படி, ஊராட்சிகளில் உள்ள பெட்டிக்கடைகள் முதற்கொண்டு, சிறிய, பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள், பனியன் நிறுவனங்கள், ஆலைகளிடம் இருந்து, ஆறு மாதத்துக்கு ஒரு முறை, தொழில் உரிம கட்டணம், ஆண்டுக்கொரு முறை தொழில் வரி வசூலிக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சலுான்கள், கம்மங்கூழ் உள்ளிட்ட சீசன் பொருள் விற்பவர்கள், இரண்டு, நான்கு சக்கர ஒர்க் ஷாப்கள் உள்ளிட்ட கடைகளிடம் இருந்தும் கூட, ஆறு மாதத்துக்கு ஒரு முறை குறைந்தபட்சம், 200 ரூபாய் தொழில் உரிமக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu