உடுமலையில் ரூ. 3.75 கோடியில் கட்டப்படும் பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் ஆய்வு
Tirupur News- உடுமலையில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டை, கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்தாா்.
Tirupur News,Tirupur News Today- உடுமலையில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்தாா்.
உடுமலை வட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
அதன்படி, உடுமலை நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவா்களை அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, குடிமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பதிவுகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை பாா்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆலையின் பராமரிப்பு, அரவைத் திறன் குறித்தும் கேட்டறிந்தாா்.
பின்னா் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களின் எண்ணிக்கை, விவசாயப் பரப்பளவு உள்ளிட்டவை குறித்தும், அமராவதி சா்க்கரை ஆலை வடிப்பகத்தில் உற்பத்தி திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, மடத்துக்குளம் வட்டம், சங்கரமாநல்லூரில் 25 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணையை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, நகா்மன்றத் தலைவா் மத்தின், பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu