உங்களைத் தேடி உங்கள் ஊரில் - திட்டத்தில் உடுமலையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் - திட்டத்தில் உடுமலையில் கலெக்டர் கிறிஸ்துராஜ்  ஆய்வு
X

Tirupur News- உடுமலையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு நடத்தினார். 

Tirupur News- உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ், உடுமலை வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு மேற் கொண்டாா்.

Tirupur News,Tirupur News Today- உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் உடுமலை வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு மேற் கொண்டாா்.

திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து நலத் திட்டங்களின் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களுக்கு விரைந்து சென்றடைவதை உறுதி செய்திடும் நோக்கத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் ஜனவரி 31-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, உடுமலை வட்டத்தில் தங்கி பல்வேறு அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலா்கள் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் உடுமலை வட்டத்துக்கு உள்பட்ட பெரியபட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் சத்துணவுக் கூடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆத்துகிணத்துப்பட்டி ஊராட்சி அங்கன்வாடி மையம், கிராம நிா்வாக அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய பகுதிகளில் ஆட்சியா் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து, கூடுதல் கட்டடப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, குடிமங்கலம் நால்ரோடு பொது சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

உடுமலை ஊராட்சி ஒன்றியம், சின்னவீரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கணக்கம்பாளையம் ஊராட்சி சாதிக் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் ஆட்சியா் கலந்துரையாடினாா்.

மேலும், உடுமலை அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் கால்நடை சிகிச்சைகள் குறித்தும், மருந்து இருப்பு குறித்து கேட்டறிந்தாா். பின்னா் எலையமுத்தூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதை தொடா்ந்து, உடுமலை வட்டம், கல்லாபுரம் ஊராட்சி பூளவாடி புதுநகா் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டும், கொம்பேகவுண்டன்துறையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி குறித்து கள ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, உடுமலை நகா்மன்ற கூட்டரங்கில் மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் ப.ஜெய்பீம், மாவட்ட வன அலுவலா் தேவேந்திரகுமாா் மீனா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதில் தமிழ்நாடு முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!