உடுமலை அருகே சட்டவிரோத சேவல் சண்டை: 3 பேர் கைது

உடுமலை அருகே சட்டவிரோத சேவல் சண்டை: 3 பேர் கைது
X

கோப்பு படம்

உடுமலையில், சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேவல் சண்டை என்ற சூதாட்டம் நடத்த, அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது எனினும், ஒருசில இடங்களில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் உள்ள கண்ணமநாயக்கனுார் சுடுகாடு பகுதியில் சேவல் சண்டை நடத்திக் கொண்டிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார், மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு சேவல்கள் மற்றும் 200 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!