தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர்  ஆர்ப்பாட்டம்
X

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம்.

தமிழக அரசை கண்டித்து, நாளை, 26ம் தேதி, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என இந்து முன்னணி அறிவிப்பு.

தமிழக அரசை கண்டித்து நாளை, (26ம் தேதி) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தெரிவித்தார்.

உடுமலைபேட்டையில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் கூறியதாவது:

கோவில் நகைகளை உருக்கும் தமிழக அரசின் திட்டம் கண்டிக்கத்தக்கது. இந்த அறிவிப்பை, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறிவிப்பாக வெளியிட்ட போதே இத்திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி, மாநிலம் முழுக்க, கடந்த, 16ம் தேதி முதல், 22ம் தேதி வரை யாத்திரை நடத்தப்பட்டது. இது, மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு கோவில்களில் உள்ள நகைகளுக்கும் தனி பாரம்பரியம், மதிப்பு உள்ளது. மக்களின் பக்தி, ஆன்மிக நம்பிக்கையை சிதைக்கும் வகையில் தி.மு.க., அரசு செயல்படுகிறது. கோவில் நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 26ம் தேதி (நாளை) தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!