/* */

உடுமலை பகுதியில் பலத்த மழை- அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சேதம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

உடுமலை பகுதியில் பலத்த மழை- அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சேதம்!
X

உடுமலை சுற்று வட்டாரத்தில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து வீணாகின.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த அமராவதி அணை பழைய ஆயக்கட்டு பாசனத்தில் இரண்டாம் போகத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் செல்வபுரம், கல்லாபுரம், பூச்சிமேடு, எலையமத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவை, , தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடுமலைப்பகுதியில் அவ்வவ்போது மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை யால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கீழே சாய்ந்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அமராவதி அணை பாசனத்தில் இரண்டாம் போகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. தற்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் கீழே சாய்ந்து விட்டன.

ஒரு ஏக்கர் நெற் பயிர் சாகுபடி செய்ய முட்டுக்கூலியாக 30, ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இப்பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்கள் கீழே சாய்ந்து வீணாகிவிட்டன. சேதமடைந்த நெற்பயிர்களுக்கு, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

Updated On: 7 Jun 2021 5:17 AM GMT

Related News