மகிழ்வான கற்றல் - மழலைகள் உற்சாகம்

மகிழ்வான கற்றல் - மழலைகள் உற்சாகம்
X

உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவியர் பூச்செடி நடவு செய்தனர். 

உடுமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவ, மாணவியர் பூச்செடிகளை நடவு செய்தனர்

உடுமலை, இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 'மகிழ்வான கற்றல்' என்ற அடிப்படையில், மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. அதன்படி, கதை, பாடல், உரையாடல், நாடகம் மற்றும் பாட இணை செயல்பாடுகள் மூலம், பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன; மாணவ, மாணவியரும் ஆர்வமுடன் கல்வி கற்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, பள்ளி வளாகத்தில் பூச்செடிகளை நடவு செய்தனர். தேசிய பசுமைப்படை சார்பில் நடந்த இந்நிகழ்வில், வீட்டுத்தோட்ட பராமரிப்பு குறித்தும், மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 'இத்தகைய செயல்பாடுகள் மூலம், மாணவ, மாணவியர், மகிழ்வுடன் பள்ளிக்கு வருகின்றனர்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story