கோரிக்கைகளை வலியுறுத்தி, கைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, கைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதம்
X
Tirupur News,Tirupur News Today- உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர் குடும்பங்கள்.
Tirupur News,Tirupur News Today- கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவித்து, உடுமலை அருகே உள்ள பெரியவாளவாடி கிராமத்தில் கைத்தறி நெசவாளர்கள், குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருந்தனர்.

Tirupur News,Tirupur News Today- கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதால், கைத்தறி நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவித்து, உடுமலை அருகே உள்ள பெரியவாளவாடி கிராமத்தில் கைத்தறி நெசவாளர்கள், குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருந்தனர்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழிலாக உள்ள கைத்தறி நெசவு தொழிலை நம்பி ஏராளமானக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நெசவுத் தொழிலின் மூலப்பொருட்களான பட்டுநூல் மற்றும் ஜரிகை போன்றவற்றின் விலை, தற்போது ஒதுக்கப்பட்ட சேலை ரகங்கள் அனைத்தும், விசைத்தறிகளில் கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி அதிகமாக தயாரிக்கப்படுவதால், நிலையாக இல்லாமல் ஏற்றம் இறக்கமாக உள்ளது.

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலை ரகங்கள் அனைத்தும், விசைத்தறிகளில் கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி அதிகமாக தயாரிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி கைத்தறி சேலைகளின் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் பெரிய வாளவாடியில் நேற்று நடந்தது. அப்போது நெசவாளர்களுக்கு தாலூகா வாரியாக தனி வங்கி ஏற்படுத்த வேண்டும். கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறியீடுடன் 11 விசைத்தறியில் உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது. பார்டர் டிசைன் உடன் கூடிய பருத்திச் சேலை, பட்டுச்சேலை, கோராப்பட்டு வேட்டியில் துண்டு, லுங்கி, ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் நெசவாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்போது பாரம்பரிய ராட்டையைச் சுற்றி நூல்நூற்று பலரது கவனத்தை ஈர்த்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!