உடுமலையில் கால்நடை மருத்துவ முகாமில் பால் உற்பத்தியாளர்கள், கால்நடை வளர்ப்போருக்கு பரிசு

உடுமலையில் கால்நடை மருத்துவ முகாமில் பால் உற்பத்தியாளர்கள், கால்நடை வளர்ப்போருக்கு பரிசு
X

Tirupur News- உடுமலையில் நடந்த விழாவில், பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. (கோப்பு படம்)

Tirupur News- உடுமலையில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் பால் உற்பத்தியாளர்கள், கால்நடை வளர்ப்போருக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை,கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து உடுமலை அடுத்த மானுப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது. முகாமை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பேசினார்.

கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.உதவி இயக்குனர் ஜெயராம்,நோய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் கௌசல்யாதேவி ஆகியோர் கால்நடைகளை தாக்கும் நோய் குறித்த தடுப்பு முறைகள் பற்றியும், மருத்துவக் கல்லூரி கூடுதல் பொறுப்பு முதல்வர் செந்தில்வேல் மற்றும் பேராசிரியர் கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்கள்.

பால்வளத்துறை பொது மேலாளர் சுஜாதா மற்றும் துணைப்பதிவாளர் ஆவின் கணேஷ் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்,ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கால்நடை டாக்டர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர் குழுவினர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள்,குதிரை, வெள்ளாடு,செம்மறியாடு, நாய் மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை,குடற்புழு நீக்கம், தடுப்பூசி பணிகள் மற்றும் கால்நடைகளில் இருந்து மாதிரி பொருட்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்ட கால்நடை வளர்ப்போருக்கும் சிறந்த பால் உற்பத்தியாளருக்கும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story