அரிமா சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை

அரிமா சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை
X

உடுமலையில் நடந்த இலவச மருத்துவ முகாமில், திரளானோர் பங்கேற்றனர்.

உடுமலையில், அரிமா சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில், திரளானோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தளி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், பிஎஸ்ஜி., மருத்துவமனை மற்றும் உடுமலை கிழக்கு அரிமா சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில், இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைப்பெற்றது.

முகாமில் பொது மருத்துவம், கண்புரை அறுவை சிகிச்சை மருத்துவம், மகளிர் நலம் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவர், தோல் நல மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், நுரையீரல் சிறப்பு மருத்துவர், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பங்கேற்று, பரிசோதனை மேற்கொண்டனர்.

இலவச மருத்துவ முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, மருத்துவ சிகிச்சை பெற்றனர். நிகழ்ச்சியில், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் மற்றும் உடுமலை கிழக்கு அரிமா சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்