உடுமலை அருகே தென்னை நார் மில்லில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஏரிப்பாளையம் பகுதியில் தென்னை நார் மில்லில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது; இதில், தென்னை நார், இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஏரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்,45. இவர், தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். அவரது மில்லில் வட மாநிலத் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்னை நார் மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ, மளமளவென பரவியதால், தென்னை நார் தொழிற்சாலையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடிக்கவில்லை.

தீ அதிகமாக பரவியதால், வடமாநில தொழிலாளர்கள் அங்குமிங்குமாக பீதியடைந்து ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த உடுமலைப்பேட்டை தீயணைப்புவீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பல மணி நேரம் போராடி, ஒருவழியாக தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், பல லட்சக்கணக்கான மதிப்பிலான தென்னை நார் தயாரிக்கும் மிஷன், நார்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து உடுமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!