புழுக்களுடன் விவசாயிகள் முற்றுகை
உடுமலை விவசாயிகள், புழுக்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெண்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசின் மேற்பார்வையில் இயங்கும் தனியார் இளம்புழு வளர்ப்பு மையங்களில் இருந்து புழுக்கள் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில், தற்போது தரமற்ற இளம் புழுக்களால் வெண்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால், பல லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, உடுமலையில் உள்ள பட்டு வளர்ச்சி வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு, தங்கள் குறையை முறையிட்டனர். இதில் பங்கேற்றவர்கள், புழுக்களுடன் ஊர்வலமாக வந்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu