இழப்பீடு தராமல் மின்கோபுரப்பணிகள் - உடுமலை அருகே விவசாயிகள் போராட்டம்

இழப்பீடு தராமல் மின்கோபுரப்பணிகள் - உடுமலை அருகே விவசாயிகள் போராட்டம்
X

உடுமலை அருகே மூங்கில் தொழுவு பகுதியில், இழப்பீடு தராமல் மின்கோபுரம் அமைக்கும் பணியை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.  

உடுமலைப்பேட்டை அருகே, உரிய இழப்பீடு தராமல் மின் கோபுரம் அமைக்கும் பணியை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள மூங்கில் தொழுவு பகுதியில், மத்திய அரசு மற்றும் பவர்கிரிட் நிறுவனம் இணைந்து இடையார்பாளையம் முதல் மைவாடி வரை 400KV உயர்மின் கோபுர திட்டத்தை மேற்கொள்கின்றன.

இந்த பணிகளுக்கு, நிலத்திற்கான எந்தவித இழப்பீடும் தராமல், நிறுவனம் தரப்பில் பணிகளை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரும் அப்பகுதிக்கு வந்தனர்.

மின்கோபுரம் அமைக்க நிலம் கையகம் செய்த விவசாயிகளுக்கு, நிலத்திற்கான உரிய இழப்பீட்டுத்தொகை கொடுத்த பிறகு நிலத்திற்குள் வர வேண்டும் என்று கூறி, ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், ஒருசிலர் உயர்மின் கோபுரங்கள் மீது ஏறி கோஷமிட்டனர். அதிகாரிகளை முற்றுகையிட்டு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai products for business