மொடக்குப்பட்டி-வாளைவாடி இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை

மொடக்குப்பட்டி-வாளைவாடி இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை
X

Tirupur News. Tirupur News Today-மொடக்குப்பட்டி-வாளைவாடி இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tirupur News. Tirupur News Today-கிடப்பில் போடப்பட்ட மொடக்குப்பட்டி-வாளைவாடி இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tirupur News. Tirupur News Today - உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரிய வாளவாடி ஊராட்சி. இந்தப் பகுதியில் சின்னவாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் கிராமங்கள் உள்ளன. இதில் சின்னவாளவாடி கிராமத்திற்கு உட்பட்ட வாளவாடி - சர்க்கார்புதூர் சாலையில் இருந்து, மொடக்குப்பட்டி ஊராட்சிக்கு இணைப்பு சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலையை விவசாயிகள் இடு பொருட்களை கொண்டு செல்வதற்கும்,விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும், தோட்டத்து சாலையில் குடியிருந்து வரக்கூடிய பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த சாலை சேதம் அடைந்ததையொட்டி அதை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. அதற்காக பொக்லைன் எந்திரத்தின் மூலமாக சாலை சமன்படுத்தப்பட்டதுடன் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. அதன் பின்பு சாலை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது,

வாளவாடி பகுதியில் தொடங்கப்பட்ட இணைப்பு சாலை பணி பாதியில் நிறுத்தப்பட்டு பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் நிலை தடுமாறி வருகிறோம். அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. மேலும், விவசாயத்துக்கு தேவையான இடு பொருட்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் முதியவர்கள் சாலையில் நடந்து செல்ல இயலாத நிலையும் உள்ளது. எனவே வாளவாடி மொடக்குபட்டி இணைப்பு சாலையை விரைந்து சீரமைத்து தருவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்