தரைபாலத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கிய தந்தை, மகன்

தரைபாலத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில்   சிக்கிய தந்தை, மகன்
X

வெள்ளத்தில் சிக்கிய தந்தையை, தேடும் பணியில் தீயணைப்பு துறையினர். 

தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து வெள்ளத்தில் தந்தை-மகன் சிக்கினர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அணிக்கடவு கிராமத்தில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. சலவநாயக்கன்பட்டி பகுதியில் தரைப் பாலத்தை கடந்த தந்தையும் மகனும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஹரி ராமகிருஷ்ணன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து , நள்ளிரவிலும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் முயற்சிக்கு பின், மகன் செல்வகுமாரை (42) மீட்டனர். தந்தை செல்லச்சாமி (70) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!