இரும்பு கதவில் சிக்கிய நாய்: காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

இரும்பு கதவில் சிக்கிய நாய்: காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்
X

இரும்பு கதவில் சிக்கிய நாய் .

உடுமலையில், வீட்டின் இரும்பு கேட் கதவில் சிக்கிய நாயை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டின் முன் பெரிய இரும்பு கேட் உள்ளது. இந்த கேட்டுக்குள் நுழைய முயன்ற நாய் ஒன்று, கதவின் இடுக்கில் கழுத்தை விட்ட நிலையில் சிக்கியது. கழுத்தை வெளிய எடுக்க முடியாமல் திணறிய நிலையில், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நாயின் தலையை சாதுர்யமாக 'கேட்'டில் இருந்து வெளியே எடுத்து, அதை பத்திரமாக மீட்டனர். தீயணைப்புத்துறையினரின் மனிதாபிமானத்தை, அப்பகுதியில் உள்ள மக்கள் பாராட்டினர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!