திருமூர்த்திமலையில் பழங்குடியினருக்கு வனப்பட்டா வழங்கல்

திருமூர்த்திமலையில் பழங்குடியினருக்கு வனப்பட்டா வழங்கல்
X

உடுமலை திருமூர்த்தி மலையில் பழங்குடியினருக்கு, அமைச்சர் கயல்விழி, மாவட்ட ஆட்சியர் வினித் ஆகியோர் வனப்பட்டா வழங்கினர்.

உடுமலை, திருமூர்த்திமலையில், பழங்குடியின மக்களுக்கு வனப்பட்டா மற்றும் மானியங்களுக்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

உடுமலை, திருமூர்த்திமலையில், பழங்குடியின மக்களுக்கு வனப்பட்டா மற்றும் மானியங்களுக்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வினீத், முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், ஆனைமலை புலிகம் காப்பகம், மேல்குருமலை செட்டில்மென்ட் சேர்ந்த, 34 பேருக்கு, வனப்பட்டா வழங்கப்பட்டது.

மேலும், 'தாட்கோ' மூலம், 21 பயனாளிகளுக்கு, 28.51 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு மானியம் விடுவிப்பதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுகுமார், 'தாட்கோ' மாவட்ட மேலாளர் சக்திவேல், மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, வருவாய் கோட்டாட்சியர் கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil