தண்ணீர் விநியோகத்தில் பாரபட்சம் வேண்டாம்: பொது மக்கள் கோரிக்கை

தண்ணீர் விநியோகத்தில் பாரபட்சம் வேண்டாம்: பொது மக்கள் கோரிக்கை
X

பைல் படம்.

'அரசாணை அடிப்படையில், அனைத்து குளம், குட்டைகளுக்கும் நீர் வழங்க வேண்டும்' என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள, கண்ணமநாயக்கனூர் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியர் கீதாவிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது:

பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மழைப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், ஒரு சில குளம், குட்டைகளுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. எனவே, கண்ணமநாயக்கனூார் குட்டைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இதன் மூலம், சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். எனவே, இக்குட்டைக்கும் நீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!