உடுமலையில், மாடுகளை மேய்க்கும் மலைவாழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க கோரிக்கை
Tirupur News- அணையில் பட்டியில் வைத்து, மாடு மேய்க்க மலைவாழ் மக்கள் கோரிக்கை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- உடுமலை மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், மாவடப்பு , காட்டுப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர்கள், பாரம்பரியமாக வறட்சியான காலங்களில், ஆழியார் அணைக்குள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை கொண்டு சென்று பட்டி அமைத்து அங்கேயே தங்கி மேய்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.
நடப்பாண்டு 3 மாதத்திற்கு முன் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஆழியார் அணைக்கரையில் மாட்டுப்பட்டி அமைத்து அங்கேயே தங்கி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் மாடுகளை மேய்த்து வருகின்றனர். மழை அதிகம் பெய்து அணைக்கு நீர் வந்தால், குடியிருப்பு பகுதியில் தீவனப்புல் வளர்ந்து விட்டால் மாடுகளை திரும்ப கொண்டு வந்து விடுவார்கள்.இந்நிலையில் வனத்துறையைச் சேர்ந்தவர்கள், மாடுகளை மேய்க்கக்கூடாது என கூறி வருகின்றனர்.
இதற்கு முன் இதே போல் பிரச்சினை ஏற்பட்ட போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு, வன உரிமை சட்டப்படி பாரம்பரியமாக எங்கெல்லாம், தங்கி மாடுகளை மேய்த்தார்களோ, அங்கெல்லாம் தங்கி மேய்ப்பதற்கு சட்டப்படி உரிமை உள்ளது. எனவே மலைவாழ் மக்கள் ஆழியார் அணையில் மாடுகளை மேய்க்க அனுமதியை பெற்றுக்கொடுத்தார். அதற்கு பின் கடந்த 5 ஆண்டு காலமாக மாடுகளை மேய்த்து வருகிறோம்.
அணையில் மாடுகளை மேய்க்க வரும் போது, தாடக நாச்சியம்மன் சுவாமிக்கு நேர்ந்து சாமி கிடா விட்டு வளர்ப்பது வழக்கம். திரும்ப செல்லும்போது கிடா வெட்டி சாமி கும்பிட்டு விட்டுச்செல்வார்கள். அதற்கும் தடை விதிக்கின்றனர். எனவே, கோட்டாட்சியர் தலையிட்டு, பாரம்பரியமாக மாடுகளை மேய்க்கும் மலைவாழ் மக்கள் உரிமையை பாதுகாத்து, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu