பழுதடைந்த கட்டிடங்களை அகற்ற முடிவு
பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற முடிவு.
உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சண்முகவடிவேல், ஆணையாளர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சிகள்) கந்தசாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு 60ஆண்டுகளுக்கு மேல் ஆனதாலும், மேற்கூரை பழுதான நிலையில் உள்ளதாலும் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அனுமதியும், கட்டிடம் கட்டுவதற்கான நிதியும் கோரி அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்புவது. தேவனூர்புதூர், கொடிங்கியம், பூலாங்கிணர், ராகல்பாவி, கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பாலப்பம்பட்டி சமத்துவபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகங்களில் பழுதடைந்து பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள சமையல் கூடம், கழிப்பறை, சத்துணவு மையக்கட்டிடம் ஆகியவற்றை, கலெக்டரின் அனுமதி பெற்று இடித்து அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu