முழு ஊரடங்கு எதிரொலி: வெறிச்சோடியது உடுமலை

முழு ஊரடங்கு எதிரொலி: வெறிச்சோடியது  உடுமலை
X
முழு ஊரடங்கு காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊடரங்கால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் செல்லவும், பகல் 12 மணி வரை காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், முழு ஊடரங்கு காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல், ஊடுமலைப்பேட்டை சுற்று வட்டார ரோடுகளில் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் இல்லாமல் காணப்பட்டன. வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அத்துடன், போலீஸார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!