அமராவதி ஆற்றில் முதலை இருப்பதால், மக்கள் பீதி

அமராவதி ஆற்றில் முதலை இருப்பதால், மக்கள் பீதி
X

அமராவதி ஆற்றில் தென்பட்ட முதலை

அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மடத்துக்குளம் பேரூராட்சி குடிநீர் நீர் உந்து நிலைய உறிஞ்சு கிணறு மேல் முதலை ஒன்று தென்பட்டுள்ளது

மடத்துக்குளம் அருகேயுள்ள கண்ணாடிபுத்துார் சிவன் கோவில் அருகே, அமராவதி ஆற்றில், மடத்துக்குளம் பேரூராட்சி குடிநீர் நீர் உந்து நிலையம் உள்ளது.ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறிஞ்சு கிணறு மேல், நேற்று, முதலை ஒன்று தென்பட்டுள்ளது.

ஆற்றில் குளிக்கச்சென்ற மக்களின் சத்தத்தை கேட்ட அந்த முதலை, மீண்டும் ஆற்று நீருக்குள் இறங்கி சென்றுள்ளது.

அமராவதி அணையில் நீர் திறக்கும் போது அணையில் உள்ள முதலைகள் ஆற்றில் அடித்து வரப்பட்டு, ஒதுககுகிறது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள், குளிக்க மற்றும் துவைக்க அமராவதி ஆற்றுக்கு வரும் நிலையில், முதலை தாக்க வாய்ப்புள்ளது என்பதால், கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!