உடுமலையில் கொரோனா சிகிச்சை ஏற்பாடுகள் தீவீரம்

உடுமலையில் கொரோனா சிகிச்சை ஏற்பாடுகள் தீவீரம்
X

பைல் படம்.

உடுமலையில், கொரோனா தொற்று சிறப்பு சிகிச்சை மையம், வகைப்படுத்துதல் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உடுமலையில், கொரோனா தொற்று சிறப்பு சிகிச்சை மையம், வகைப்படுத்துதல் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய பகுதிகளில், மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. உடுமலை நகராட்சியில், 12 பேர் மற்றும் ஊரக பகுதிகளில், 50க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அரசு மருத்துவமனையிலும், வீட்டு தனிமையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதோடு, கிராமப்பகுதிகளில் அதிகளவு காணப்படுவதால், சுகாதாரத்துறையினர் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர். உடுமலை அரசு மருத்துவமனையில், 144 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாதவாறு, புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அரசு கல்லுாரி வளாகத்தில், கொரோனா கேர் சென்டர் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. கிராமப்பகுதிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சமுதாய நலக்கூடங்களை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள மக்களுக்கு உதவும் வகையில், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அருகிலுள்ள, மனமகிழ் மன்றம், பெருந்தொற்று வகைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

Tags

Next Story