கொரோனா பரவல் - உடுமலையில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா பரவல் - உடுமலையில் கிருமி நாசினி தெளிப்பு
X

உடுமலையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக, உடுமலையில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

மற்றொரு பக்கம் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும், மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு இடங்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india