உடுமலையில் தொடர் மழை: கோவிலை சூழ்ந்தது வெள்ளம்

உடுமலையில் தொடர் மழை: கோவிலை சூழ்ந்தது வெள்ளம்
X

உடுமலை அம்மணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

உடுமலையில், தொடர் மழை பெய்ததால், அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், பஞ்சலிங்க அருவியில், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளம், திருமூர்த்தி மலை, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை சூழ்ந்தது. இதனால், மாலையில் நடக்க இருந்த பூஜைகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!