சூடு பறக்கும் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தேர்தல் களம்
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தேர்தலில் சீட் கிடைக்காத திமுகவினர் 5 பேர், கட்சி கட்டுப்பாடுகளை மதிக்காமல், சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். அது மட்டுமின்றி, திமுக வாக்குகளை பிரித்து, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை தோற்கடிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.
இதுவாவது பரவாயில்லை. தனக்கு சீட் கிடைக்காததால் சுயேச்சையாக நிற்கிறார்கள் என ஏற்றுக்கொள்ளலாம். திமுக பேரூராட்சி துணை செயலாளர் இளங்கோவன் அதையும் மிஞ்சி விட்டார்.
இளங்கோவன் திமுக சார்பில் 10வது வார்டில் போட்டியிடுகிறார். அவரது மகன் ரஞ்சித்குமார் பாஜகவில் உள்ளார். 8வது வார்டில் திமுக வேட்பாளருக்கு எதிராக தனது மருமகள் அபிநயாவை சுயேச்சையாக களம் இறக்கியுள்ளார். இதனால் 8வது வார்டில் திமுகவின் வாக்குகள் பிரியும் என்பதால் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.
தனக்கு சீட் கிடைத்த பிறகும், பக்கத்துக்கு வார்டில் தனது சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக, மருமகளை சுயேச்சையாக நிறுத்தி பிரசாரம் செய்து வாக்குகளை பிரிக்கும் திமுக பிரதிநிதியின் செயலை பார்த்து அக்கட்சியினரின் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu