தேங்காய் பறிக்க இயந்திரம் வேளாண்மை துறையில் அறிமுகம்

தேங்காய் பறிக்க இயந்திரம் வேளாண்மை துறையில் அறிமுகம்
X

தேங்காய் பறிக்க இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

வேளாண் பொறியியல் துறை சார்பில் தேங்காய் பறிக்கும் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் தென்னை சாகுபடியில் தொழிலாளர் பற்றாக்குறை தீர்வாக, வேளாண் பொறியியல் துறை சார்பில் தேங்காய் பறிக்கும் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது உடுமலை குடிமங்கலம் வட்டாரங்களில் தென்னை சாகுபடியில் தேங்காய் பறிக்க தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே குறித்த நேரத்தில் தேங்காய் பறிக்க முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது.

தற்பொழுது வேளாண் பொறியியல் துறை சார்பில் உடன் கூடிய கைத்தொலைபேசி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பான பெட்டி, 360 டிகிரி சுழலும் தன்மை கொண்டது. இந்த பெட்டியில் ஆட்கள் நின்றபடி சுற்றியுள்ள மரங்களில் இருந்து தேங்காய் பறிக்கலாம். இந்த இயந்திரத்தை வாடகைக்கு பெற உடுமலை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை விவசாயிகள் அனைவரும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!