ராகல்பாவி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

ராகல்பாவி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா
X

உடுமலை ராகல்பாவி பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது 

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் தின விழா நடந்தது. இதில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் திருவுருவ படத்திற்கு ரோஜா மலர்களை துாவி, மாணவ, மாணவியர் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, குழந்தைகளுக்கு பல வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வென்றவர்களுக்கு, குடியரசு தின விழாவின் போது, பரிசுகள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியர் கண்ணபிரான், ஊராட்சித்தலைவர் சுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai future project